நடிகர் சங்க தேர்தலின் போதே விஷால்-சிம்பு இருவரும் மோதிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் இவர்கள் ஒரு படத்தை வைத்துக்கொண்டு மோதி வருகின்றனர். இதை நாம் நேற்றே கூறியிருந்தோம்.
தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிக்கப்போவதாக கூறப்பட்டது, மேலும் இதை மைக்கல் ராயப்பன் தயாரிப்பதாகாவும் கூறப்பட்டது. இதே படத்தின் ரீமேக் உரிமையை விஷால் வாங்கிவிட்டார், அவரும் நடிக்கின்றார் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.
இதுக்குறித்து சிம்புவிடம் கேட்டால், நீங்கள் தயாரிப்பாளரை கேளுங்கள் என்று கூறி முடித்துவிட்டார். விஷால் தரப்பு இப்படத்தை அனல் அரசு இயக்கவில்லை என்று மட்டும் தான் கூறியுள்ளனர். தற்போது யார் தான் அந்த டெம்பரில் நடிப்பது?.