இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இன்றைய விழாவை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நடத்தியுள்ளார். ரஜினிகாந்த் உள்பட பல முக்கிய விருந்தினர் இன்றைய விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் நாளை இந்தியா வருகிறார். தற்போது அவர் '"Kung Fu Yoga" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு நாளை முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக நாளை காலை அவர் இந்தியா வருகிறார்.
 
இந்த படத்தில் 'அனேகன்' நாயகி அம்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்கிசானின் வழக்கமான நகைச்சுவையுடன் கூடிய அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வரும் ஜாக்கிசானை வரவேற்க அவருடைய ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
 
இன்று விஜய் படத்தின் இசைவிழாவும், நாளை ஜாக்கிசான் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.