'பாகுபலி 2 படத்தில் இணைகிறாரா பிரபல பாலிவுட் நடிகை?

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய முன்னணி நடிகைகள் நடித்து வரும் நிலையில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
'பாகுபலி 2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இந்த கேரக்டர் குறித்து அவரிடம் விரைவில் படக்குழுவினர் விளக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்