இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம்
முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இன்று விஜய்யின் அடுத்த
படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது.
இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ்,
இயக்குனர் பரதன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். விஜய் வேஷ்டி
சட்டையிலும், கீர்த்தி சுரேஷ் சேலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு
'விஜய் 60' என்று அழைக்கப்படுகிறது.
எங்கள் வீட்டு பிள்ளை, படிக்காதவன், வீரம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் வில்லன்களாக ஜெகபதிபாபு மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இதுதான் இவர் இசையமைக்கும் முதல் விஜய் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுகுமார் ஒளிப்பதிவில், ப்ரவீன் கே.எல். படத்தொகுப்பில் கவியரசு வைரமுத்து பாடல் வரிகளில் இந்த படம் உருவாகவுள்ளது. இன்று தொடங்கிய படப்பிடிப்பு இரண்டு நாட்கள் மட்டும் நடைபெறும் என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிந்தபின்னர் நடைபெறும் என்று கூறப்படுகிறது.