அதிமுக வேட்பாளர் பட்டியலில் இரண்டு கோலிவுட் நடிகர்கள்

பிரபல காமெடி நடிகரும் நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான கருணாஸ் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்தார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. நடிகர் கருணாஸ் அதிமுக வேட்பாளராக திருவாடனை தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதேபோல் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான சரத்குமார், மீண்டும் அதிமுக கூட்டணியில் சமீபத்தில் இணைந்தார். அவர் இந்த தேர்தலில் அதிமுக சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்