கார்த்தியை இயக்கும் விஜய்யின் வெற்றி இயக்குனர்

இளையதளபதி விஜய் கேரியரில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் என்றால் முதல் வரிசையில் இருப்பது 'போக்கிரி'தான். இந்த படத்தின் மாபெரும் வெற்றி அனைவரையும் மிரள வைத்தது. இந்த படத்தை இயக்கிய இயக்குனரும் நடன இயக்குனருமான பிரபுதேவா, அதன் பின்னர் பல படங்களை இயக்கினாலும், இந்த வெற்றிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் பிரபுதேவாவின் இயக்கத்தில் கார்த்தி, ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கார்த்தி தற்போது நயன்தாராவுடன் 'காஷ்மோரா' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய்யுடன் பிரபுதேவா இணைந்த 'போக்கிரி' போல் இந்த படம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்