சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம
ஆளு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெகுவிரைவில் அடுத்தடுத்து ஒரு சிறு
இடைவெளியில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்
மூன்று வேடங்களில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், மிகப்பெரிய
பட்ஜெட்டில் இந்த படம் உருவாகவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ள ஒரு கேரக்டருக்காக 20கிலோ
உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். இந்த படத்தின் மூன்று கேரக்டரில் ஒரு
கேரக்டர் நார்மல் எடையுடனும், ஒரு கேரக்டர் 70 கிலோ எடையுடனும், இன்னொரு
கேரக்டர் 90 கிலோ எடையுடனும் இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல்
இறுதிக்குள் சிம்பு உடல் எடையை கூட்டவுள்ளதாகவும் அதன்பின்னர் இந்த
படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
கமல், விக்ரம் போன்ற நடிகர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்களுக்காக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் தங்கள் ஈடுபாட்டினை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது சிம்புவும் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.