இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழகத்தை அடுத்து மாபெரும் ரசிகர் கூட்டம் கேரளாவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் 'தெறி' ரிலீஸ் ஆகவுள்ளது. கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் 'தெறி' ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் இப்போதே 170 திரையரங்குகள் கன்பர்ம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி என்பது கேரளாவில் விஷூ பண்டிகை கொண்டாடும் ஒரு சிறப்பான நாள் ஆகும். இந்த நாளில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் 'ஒயிட்', மற்றொரு பிரபல நடிகர் ஜெயராம் நடித்த 'ஆடுபுலி ஆட்டம்', குஞ்சகோ போபனின் 'வல்லியும் தெட்டி புலியும்' ஆகிய படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படங்களின் ரிலீஸ் ஒருவாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜய்யின் 'தெறி' ரிலீஸ் காரணமாகவே இந்த ஒத்திவைப்பு நிகழ்ந்ததாக கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.