'தெறி' படத்திற்கு ஏற்பட்ட திடீர் ஒத்திவைப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்று அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு படமான 'போலீஸ் ஒஹ்டு' படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 6ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற இருந்தது.

ஆனால் திடீரென  தற்போது இந்த படத்தின் இசை வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இசை வெளியீட்டின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'தெறி' படத்தின் தமிழ் பாடல்கள் போலவே இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'போலீஸ் ஒஹ்டு' படத்தின் பாடல்களும் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்