வட சென்னை - படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..? - திரை விமர்சனம்


தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது வட சென்னை திரைப்படம். சேவல் சண்டை விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருதைப் கிடைத்தது. அந்த வகையில் வட சென்னை திரைப்படத்தில் தனுஷ் தேசியளவில் கேரம் போர்டு சாம்பியனாக நடித்துள்ளார்.

வட சென்னை படம் 3 பாகங்களாக உருவாகவுள்ளது. விளையாட்டு மட்டுமல்லாமல் கேங்கஸ்டர் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள முதல் பாகத்தில் தனுஷின் அன்பு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. 1980 முதல் 2000ம் ஆண்டு வரை அன்புவின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் (அன்பு) உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து, ஆண்ட்ரியா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அமீர் (ராஜன்) உடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ராதா ரவி, கருணாஸ், கிஷோர், டேனியல் அன்னி போப் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். அவர்களுக்கான கதாப்பாத்திரம் கச்சிதமாக பொறுந்தியுள்ளது.

கேங்கஸ்டர் ஆக்‌ஷன் படமாக அசத்தலாக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ளதோடு, படத்தில் அமீருக்கு டப்பிங் கொடுத்துள்ளார். ரத்தம் தெறிக்கும் வகையில் படம் முழுவதும் செல்வதால் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 பாகமாக வரும் வட சென்னை படத்தின் 2ம் பாகத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகளும் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள். வாங்க பாக்கலாம்,
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்