தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படம் வடசென்னை. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது.
சென்னையின் 30 ஆண்டுகால நிகழ்வுகளை மைப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் இப்படத்திற்கு சென்சார் போர்ட்டு A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
80 களில் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி இப்படத்தில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
மேலும் எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலுக்கட்டாயமாக இறக்கித் தள்ளிவிடப்பட்டதாக காட்சிகள் தற்போதும் இணையத்தில் வலம் வருகிறது.
இதனால் படக்குழு இந்தக் காட்சியை படத்துடன் இணைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இக்காட்சிகள் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால் அதை சென்சார் போர்டு அதிகாரிகள் நீக்கியுள்ளார்களாம்.
மேலும் தி.மு.க, ஜெயலலிதா ஆகிய வார்த்தைகள் படத்தில் மியூட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில ஆபாச வார்த்தைகளைமும் மியூட் செய்யுமாறு தணிக்கைக் குழு படக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.