'விவேகம்' படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'விஸ்வாசம்'. இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் 'விஸ்வாசம்' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் படத்திற்கான பூஜை நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு துவங்கியது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் மட்டுமே நடந்தது. சென்னையில் படப்பிடிப்பு நடந்தது பற்றிய எந்தத் தகவலும் இல்லை. 

அஜித் இதற்கு முன் நடித்த 'வீரம், விவேகம்' ஆகிய படங்களின் படப்பிடிப்பும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. ஐதராபாத்தில்தான் அதிகம் நடைபெற்றது. அது போலவே 'விஸ்வாசம்' படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது. மும்பை, புனாவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின் 'விஸ்வாசம்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாம். 2019ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.