சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் தற்போது தனுஷின் இரண்டு படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் தனுஷ் தயாரிப்பில் தினேஷ், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' ஆகிய படங்களின் கன்னட ரீமேக் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளதாகவும், இந்த ரீமேக் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் 'விசாரணை' படத்தை இந்தியிலும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது