ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் கார்த்தி படம்

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'தோழா' திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது. ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வெற்றிகரமான வாரமாக இந்த படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படம் பிரெஞ்ச் மொழியில் வெளியான 'The Intouchables' என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 'The Intouchables' படம் விரைவில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

  தமிழ் மற்றும் தெலுங்கில் கார்த்தி-நாகார்ஜுனா நடித்த வேடங்களில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான Bryan Cranston மற்றும் Kevin Hart நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்