விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் - போனஸ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் தெறியாக வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஏழு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் போனஸாக ஒரு சிறிய பாடலை போனஸாக உருவாக்கியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். 

இந்நிலையில் இந்த போனஸ் பாடலை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தற்போது அறிவித்துள்ளார். 'தெறி' படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே இந்த போனஸ் பாடல் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள தெறி படத்தை அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிர்மாண்டமாக தயாரித்துள்ளார்.

'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணியும் முற்றிலும் முடிந்துவிட்டது. 

இந்நிலையில் 'தெறி' படத்தின் தெலுங்கு டப்பிங் படமான 'போலீஸ் ஓஹ்டு' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30க்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் செய்தியாக உள்ளது.

'தெறி'யின் தமிழ் டிரைலர் தமிழக விஜய் ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது போலவே இந்த தெலுங்கு டிரைலருக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்