விஷால் நடித்துள்ள 25வது படம் சண்டக்கோழி-2. லிங்குசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோருடன் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 18-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. 

மேலும் இந்தப்படத்தின் துவக்கத்தில் படம் பற்றிய விஷயங்களுக்கு நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளாராம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கார்த்தியே அந்த குரல் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.