தற்போது விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் 19-ந்தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. 

சர்கார் படத்தின் ஹிந்தி சார்ட்டிலைட் உரிமம் ரூ. 24 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதற்கு முன்பு தென்னிந்திய படங்களில் பாகுபலி-2 படத்தின் ஹிந்தி சார்ட்டிலைட் ரூ. 51 கோடிக்கு விற்பனையானது. அதையடுத்து இப்போது விஜய்யின் சர்கார் படம் ரூ. 24 கோடிக்கு விற்பனையாகி பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.