படையப்பாவில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நெகடீவ் ரோல் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தது. அதையடுத்து விஷாலின் திமிறு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த வில்லி வேடம் பேசப்பட்டது. இந்த நிலையில், சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடமும் ஸ்ரேயா ரெட்டி வேடத்திற்கு இணையாக இருக்கும் என்கிறார்கள்.
இதுபற்றி அப்பட நாயகி கீர்த்தி சுரேஷ் கூறுகையில், சண்டக்கோழி-2வில் வில்லி வேடத்தில் மிரட்டியிருக்கிறார் வரலட்சுமி. அந்த வேடத்தில் அவரது நடிப்பைப்பார்த்ததில் இருந்தே அவரிடம் பேசுவதற்கே எனக்கு பயமாக உள்ளது. மிரட்டல் என்றால் அப்படியொரு மிரட்டல் என்கிறார்.