தமன்னாவை வாழ்த்தி அனுப்பி வைத்த ஏ.எல்.விஜய்

ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தில் பிரபுதேவாவுடன் முதன்முறையாக நடித்தார் தமன்னா. ஹாரர் கதையில் உருவான அந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவாவே நடனம் அமைத்திருந்தார். 

அந்த பாடல்களுக்காக பல நாட்களாக ரிகர்சல் எடுத்து மிக கஷ்டப்பட்டு ஆடியதாக தெரிவித்தார் தமன்னா. இந்த நிலையில், தற்போது மீண்டும் தேவி-2 படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். 

மொரிஷியஸில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்ததும் படக்குழுவுக்கு குட்பை சொல்லியிருக்கிறார் தமன்னா. 

தமன்னா அங்கிருந்து விடைபெறும்போது, தேவி படத்தை விட, தேவி-2வில் தமன்னாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக சொன்ன ஏ.எல்.விஜய், தமன்னாவின் கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றும் சொல்லி வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்