சமூகவலைதளங்கள் முழுக்க முழுக்க தற்போது பலரும் MeToo tag ஐ வைத்து
தங்களுக்கு நடந்த பாலியல் குற்றச்சாட்டுக்களை பேசி வருகிறார்கள்.
இதில்
தற்போது பெண் கவிஞரும் இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டு பயலே
படத்தின் இயக்குனர் சுசி கணேஷன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
2005
ல் அவரால் காரில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன். காரை லாக் செய்து விட்டு
ஒரு மாதிரியாக குரலில் பேசி என்னை அவரின் அபார்ட்மெண்டுக்கு வரவேண்டும் என
மிரட்டினார்.
அவரை கத்தியை காண்பித்து என் போனையும் பிடுங்கி கொண்டு
நான் தப்பித்து விட்டேன். அப்போது இதை சொல்லக்கூட தைரியமில்லை. இப்போது
பலரும் அதை பற்றி பேசுவதால் நான் வெளிப்படையாக பேசுகிறேன் என கூறியுள்ளார்
லீனா.
இதனால் இயக்குனர் சுசி, லீனா தன்னிடம் மன்னிப்பு கேட்க
வேண்டும். இல்லையென்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் என கூற அதற்கு
சரியான பதிலடி கொடுத்துள்ளார்.